Reading Time: < 1 minute

பிரதமர் கனடா பிரதமரை, கனடாவின் ஜனாதிபதி என ட்ரம்ப் அழைத்ததைக் காட்டும் சுவாரஸ்ய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

எகிப்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு உச்சி மாநாட்டின்போது, கனடா பிரதமரான மார்க் கார்னியை தவறுதலாக கனடாவின் ஜனாதிபதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்தார்.

ட்ரம்பின் உரை முடிந்ததும் மேடையிலேயே அவரை சந்தித்த கார்னி, ஜனாதிபதியாக எனக்கு பதவி உயர்வு கொடுத்ததற்கு நன்றி என கிண்டலாகக் கூறினார்.

தன் தவறை உணர்ந்தாலும், ட்ரம்பும் கொஞ்சமும் சளைக்கவில்லை. பதிலுக்கு, உங்களை கவர்னர் என அழைக்காமல் விட்டேனே அதற்காக சந்தோஷப்படுங்கள் என்றார்.

அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.