சூடானிலிருந்து கனடிய பிரஜைகளையும் மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இடம்பெற்று வரும் கடுமையான வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அங்கு தங்கியிருந்த கனடியர்கள் மீட்கப்பட்டு வந்தனர்.
விமானங்கள் மூலமாக இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் மோசமடைந்து செல்லும் காரணத்தினால் இந்த மீட்பு நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படுவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூடானிலிருந்து வெளியேற எத்தனிக்கும் கனடியர்கள், சூடான் துறைமுகம் வழியாக வெளியேறுவதற்கு முயற்சிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் ஊடாக வெளியேறுவதற்கான முயற்சிகள் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் கனடியர்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும் சூடானில் சிக்கியுள்ள கனடிய பிரஜைகளை மீட்டு எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆராய்ந்து வருவதாகவும் சூடானின் பாதுகாப்பு நிலமைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாகவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.