Reading Time: < 1 minute

2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

“Flsh Pack” பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி “Forbes” வணிக இதழ் இதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு மேல் ஜப்பான்இ அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

பல பொருளாதார நெருக்கடிக்கு பிறகுஇ இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று Avadia இணையத்தளத்தின் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023ஆம் ஆண்டில் 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த நாட்டில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,068 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.