தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும் என கோரி அல்பர்ட்டா மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்ற நிலையில், இது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக அமைச்சர் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் பல சட்டவிரோத வேலைநிறுத்தங்கள் குறித்து அவர் அறிந்திருப்பதாக அமைச்சர் டோவ்ஸ் தெரிவித்தார்.
அல்பர்ட்டா தனது வரவுசெலவு திட்டத்தில் 42 சதவீதம் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது. இது 2015 முதல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. சுகாதார செலவினங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளன.
மேலும் இந்த ஆண்டு 20.9 பில்லியன் டொலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பாக கொவிட்-19க்கு 769 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டோவ்ஸின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர அல்பர்ட்டா சுகாதார சேவைகள் அல்பர்ட்டா தொழிலாளர் உறவுகள் சபையுடன் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்று அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனியார்மயமாக்கலினால், 11,000 ஜிஎஸ்எஸ் (பொது ஆதரவு சேவைகள்) வேலைகள் இழக்கப்படுகின்றன.