அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்தை தொடர்ந்து சீனா – தாய்வான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
பதற்ற நிலையை தணிக்க ஏதுவாக செயற்படுமாறு கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எந்தவொரு நாட்டின் உயர் அரசியல்வாதிகளும் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்தை பதற்றங்களைத் தூண்டுவதற்கான ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்த முடியாது என ஜேர்மனி வெளியுறவு அமைச்சருடன் இணைந்து நேற்று மொன்றியலில் செய்தியாளர்களிடம் பேசிய மெலனி ஜோலி தெரிவித்தார்.
இந்நிலையில் பதற்றங்களைத் தணிக்குமாறு நாங்கள் சீனாவிற்கு அழைப்பு விடுக்கிறோம். அதிகரிக்கும் பதற்றங்களால் பிராந்திய ஸ்திரமின்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்.