Reading Time: < 1 minute

சீனா- கனேடிய பாடகரான Kris Wu பலாத்காரம் மற்றும் பிற குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் நான்கு பெண்களை கும்பல் ஒன்று துஸ்பிரயோகம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாடகர் Kris Wu பலாத்கார வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள Chang’An Net இணைய பக்கமே குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் பாடகர் Kris Wu மீதான விசாரணை துவங்கப்பட்ட வேளை தொடர்பில் பல எண்ணிக்கையிலான இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்தே பாடகர் Kris Wu விசாரணைக் கைதியாக சிறையில் உள்ளார். அவர் மீதான பலாத்கார வழக்கு நிரூபணமானால் 3 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரையில் தண்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. பாடகர் Kris Wu கடந்த ஆண்டு குடிபோதையில் தன்னுடன் உறவு கொண்டதாக இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் பாடகர் Kris Wu குறித்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இதனிடையே, நான்கு பெண்கள் மீதான தாக்குதலானது தலைநகர் பீஜிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமெரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஞாயிறன்று 9 பேர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.