கிறிஸ்மஸ் வாரத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், ஒருவர் உயிரிழந்ததோடு 23 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
மிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள, சீசனின் முதல் இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
லண்டன் பிராந்தியத்தில் காய்ச்சல் செயற்பாடு டிசம்பர் 15ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் ஜனவரி 4ஆம் திகதி 2020 வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி நோய்கள் 66 ஆய்வகங்களால் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிறிஸ்மஸ் வாரத்தில் லண்டன் பகுதியில் 22 இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் ஒன்பது இன்ஃப்ளூயன்ஸா பதிவுகள் பதிவாகியுள்ளன.
அதே வாரத்தில், பிராந்தியத்தின் அவசர அறைகளில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளில் ஒருவர் காய்ச்சல் அறிகுறிகளைக் காட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள குழந்தை நோயாளிகளில், அந்த எண்ணிக்கை ஐந்தில் இரண்டாக இரு மடங்காக அதிகரித்தது.