Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாணத்தின் வடக்கேயுள்ள புறநகரான பரி (Barrie) யில் இளைஞர் ஒருவர் தனது ‘ஸ்கேட் போர்ட்டில்’ சிவப்பு போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரியும்போது பாதையைக் கடந்ததால் அவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று வலைத்தளங்களில் பரவலாக்கப்பட்டு வருகிறது.

கடந்த வியாழன் (Feb 4), மாலை 4 மணியளவில் Barrie நகரின் டன்லப் வீதியில் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது 20 வயதுடைய இளைஞரைப் பொலிசார் கைதுசெய்யும் காட்சியைப் பாதசாரி ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்து முகநூலில் பதிவுசெய்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது அவ்விளைஞர் தான் பொலிசாருடன் ஒத்துழைக்கிறேன் என்னைத் தாக்காதீர்கள் எனக் கெஞ்சும்போதும் ஒரு பொலிஸ்கார அவரது தலையில் ரேசர் துவக்கினால் அடிப்பதும், அப்போது பாதசாரிகள் பலரும் பொலிசாரைத் திட்டுவதும் கேட்கிறது.

“நான் இக் காணொளிகளைப் பார்த்துள்ளேன். இது முழுமையாக விசாரிக்கப்படும்” எனப் பரி நகர பிதா ஜெ லெஹ்மான் தெரிவித்துள்ளார்.