சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு கனேடிய பெண்கள் மற்றும் 13 கனேடிய சிறுவர்களை மீட்டு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த பெண்கள் மற்றும் சிறுவர்களின் சார்பிலான சட்டத்தரணி இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
19 கனேடியர்கள் மீட்பது குறித்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணி லோரன்ஸ் கிறின்ஸ்பொன் தெரிவித்துள்ளார்.
குர்திஸ் படையினரால் சிரியாவில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் கனேடியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை மீட்க சமஷ்டி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அது சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் வகையிலானது எனவும் குறித்த கனேடியர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.