Reading Time: < 1 minute
சிரியாவின் மீதான தடையை நீக்குவது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக சிரியா மீது கனடா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
சிரியாவின் நிலைமைகளை கனடிய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட காலமாக சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பசார் அல் அசாட்டின் அரசாங்கம் அண்மையில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.
சிரியாவின் கிளர்ச்சிப் படையினர் இந்த ஆட்சி கவிழ்ப்பினை மேற்கொண்டிருந்தனர்.
எச்.ரீ.எஸ் என்ற கிளர்ச்சிப் படையினர் மீதான தடைகளை நீக்குவது குறித்தும் கனடா ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.