சால்மன் மீன் வாழ்விடத்தை பாதுகாக்க, வன்கூவர் தீவு இலாப நோக்கற்ற அமைப்பு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆறுகளில் சால்மன் மீன் வாழ்விடத்தை மீட்டெடுக்கும் திட்டத்தில் 1,000 இற்க்கும் மேற்பட்ட மரத் துண்டுகள் மற்றும் விழுந்த மரங்களைத் வன்கூவர் தீவு இலாப நோக்கற்ற அமைப்பு தேடுகிறது.
சால்மன் வாழ்விடத் தரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கிளேயோகோட் மற்றும் பார்க்லி சவுண்ட்ஸ் முழுவதும் குறிப்பிட்ட நீரோடைகளில் மரத் துண்டுகளை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெஸ்டர்ன் ஹெம்லாக், சிட்கா ஸ்ப்ரூஸ், பால்சம் ஃபிர், டக்ளஸ் ஃபிர், மற்றும் ஐந்து முதல் 12 மீட்டர் நீளம் மற்றும் 20 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட சிடார் போன்ற கூம்புகளை நாடுகிறார்கள்.
இதுகுறித்து சென்ட்ரல் வெஸ்ட்கோஸ்ட் ஃபாரஸ்ட் சொசைட்டியின் செயற்பாட்டு மேலாளர் மேகன் பிரான்சிஸ் கூறுகையில், “ஆறுகளில் விழும் இயற்கை மரத்துண்டுள் மீன் வாழ்விடத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இயற்கையாகவே ஒரு மரம் நீரோட்டத்தில்
விழும்போது, அது நீரின் ஓட்டத்தை மெதுவாக்கப் போகிறது, மேலும் இது மீன்களை வளர்ப்பதற்கு மிகவும் எளிதாக்குகிறது, ஏனெனில் அவை பாதுகாப்பாக இருப்பதாக உணருகின்றன.
எனினும், சமீபகாலமாக சால்மன் நீரோடைகளில் விழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ஆறுகளைச் சுற்றி புதிய வளர்ச்சி காடுகள் இருந்தாலும், அந்த மரங்கள் ஓடையில் விழுந்தாலும், அவை பழைய வளர்ச்சி போன்று இல்லை” என கூறினார்.