Reading Time: < 1 minute
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்வினை 7.6 மில்லியன் கனடியர்கள் பார்வையிட்டுள்ளனர்.
முழு நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சியின் ஓரு பகுதியினை கனடியர்கள் இவ்வாறு நேரலையாக பார்வையிட்டுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இளவரசர் ஹரி மற்றும் மெகனின் திருமண நிகழ்வினை 12 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரித்தானியாவில் முடிசூட்டு நிகழ்வினை 20 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
முடிசூட்டு விழா நிகழ்வில் கனடிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.