பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது.
நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தொழிற் சங்க ஊழியர்களுக்கும். பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக தொடர்ந்த இந்த பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவந்த சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால், மூன்று வாரமாக 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இவர்கள், கிரேற்றர் விக்ரோரியா மற்றும் சூக்கின் அண்டை மாவட்டங்களில் இருப்பதை விட சானிச் பாடசாலையில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊதிய சமநிலை பேணப்பட வேண்டுமெனவும் கோரி இந்தப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.