தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சனிக்கிழமை காலையில், அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் மீட்புப் படகு ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
வான்வழி மற்றும் மூழ்கி தேடும் சோதனைகளைத் தொடர்ந்து, தற்போது தேடுதல் பரப்பை விரிவுபடுத்துவதற்காக ‘சோனார்’ சாதனங்களை மீட்புக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தேடுதல் நடவடிக்கை தற்போது உடல்களை மீட்கும் பணிக்கான கூர்மையுடன் தொடர்கிறது. சாஸ்கடூன் நாய்கள் பூங்காவை ஒட்டியுள்ள ஆற்றின் கிழக்குப் பகுதியில் இவர்கள் ஆற்றில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் நாய் பூங்காவிற்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கனடாவில் ஆண்டுதோறும் சராசரியாக 485 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
இதில் 27 சதவீதமான உயிரிழப்புகள் ஆறுகளிலேயே நிகழ்கின்றன. மாகாணங்களைப் பொறுத்தவரை நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணமும் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.