Reading Time: < 1 minute
முன்னாள் பிரதமர் சர் ஜான் ஏ. மெக்டொனால்டின் சிலை உடைப்பு, மிகுந்த வருத்தமளிக்கிறது என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
மொன்றியலில் வார இறுதியில் பொலிஸ் மிருகத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதமரின் சிலை உடைக்கப்பட்டது.
இந்தநிலையில், சிலையை கவிழ்த்த தகவல் அறிந்தபோது, ஜஸ்டின் ட்ரூடோ மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
“கனடா சட்டங்களை மதிக்கும் நாடு. அவற்றை மேம்படுத்தவும் மாற்றவும் முற்படும்போது கூட அந்த சட்டங்களை மதிக்க வேண்டிய நாடு. காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகள் இந்த நாட்டில் அதிக நீதி மற்றும் சமத்துவத்தை நோக்கிய பாதையை முன்னேற்றுவதில்லை” என கூறினார்.