அல்பேர்ட்டா பொலிஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள், பணம் மற்றும் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மிகப்பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு கல்கரி நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 53 வயதான வாரன் லோவ் என பொலிஸார அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
கல்கரி அதிகாரிகள் தலைமையிலான இரண்டு ஆண்டு விசாரணையின் பின்னரே, குறித்த ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போதை மருந்துகள், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரொக்க பணம் மற்றும் 13 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 2018ஆம் ஆண்டு கல்கரி குடியிருப்பில் இருந்து 250,000 ஃபென்டானில் மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். எனினும், இதன்போது யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது இந்த சம்பவத்துடனும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது கனடாவில் உள்ள மிகப்பெரிய சர்வதேச குற்ற வலையமைப்பு என நம்பப்படுகின்றது.