மேயாத மான் பட புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் நேற்று மாலை வெளியானது. அமலா பால் நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ரிலீஸ்க்கு முன்பே படம் பற்றி பலரையும் பேசவைத்தது.
பண பிரச்சனையால் நேற்று காலை காட்சிகள், மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின் அமலா பால் தன் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை விட்டுக்கொடுத்ததால் படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் படம் வெளியானதும் பல விமர்சகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சிறந்த கதை அமைப்பு, இயக்கம், அமலா பாலின் நடிப்பு ஆகியன பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
படத்திற்கு ஆதரவுகளும், வாழ்த்துக்களும் குவிந்துள்ளன. நடிகை விஜி சந்திரசேகரும் படத்தை பார்த்து வாழ்த்தி கருத்து பதிவிட அதற்கு அமலா பாலும் நன்றி தெரிவித்துள்ளார்.
Watched #Aadai brilliant script.congrats to the whole team for this neatly made film. Applauds to the bold lady @Amala_ams for her stunning performance as Kamini.Ananya the new girl was amazing. @ramyavj good job . must watch.credits to dir @MrRathna