இரகசிய முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (கிளியர்வியூ ஏஐ) ஹாமில்டன் பொலிஸார் அணுகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், துணைத் தலைவர் பிராங்க் பெர்கனால் சர்ச்சைக்குரிய இந்த தொழில்நுட்பத்தை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹாமில்டன் பொலிஸ் சேவை கிளியர்வியூ ஏஐக்கான உள்நுழைவு சான்றுகளை ஒரு சோதனைக் காலத்தின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளது என்று சேவையின் தகவல் சுதந்திரக் கிளையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை எந்தவொரு புலனாய்வு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தவில்லை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு ஹாமில்டன் அதிகாரிகள் ஒரு சட்ட அமுலாக்க மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் சோதனை அடிப்படையில் கிளியர்வியூவை அணுகியதாக கூறப்படுகின்றது.
ஒரு நபரின் பெயர் மற்றும் அவர்களின் தொலைபேசி எண், முகவரி அல்லது தொழில் போன்ற பிற தகவல்கள் உள்ளிட்ட தேடல் முடிவுகளை கிளியர்வியூ ஏஐ, ஒரு புகைப்படத்தைத் தவிர வேறொன்றையும் அடிப்படையாகக் கொள்ளாது. இந்த திட்டம் பொது பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை.