Reading Time: < 1 minute

கனடாவில் சக மாணவி ஒருவரை படுகொலை செய்த மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிடுக்கில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

17 வயதான ஜெனிபர் வின்க்ளியர் என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலை சம்பவத்திற்கு தண்டனையாக ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளதுடன் 12 ஆண்டுகள் வரையில் பரோலில் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 22 வயதான டய்லான்ட் பவுண்ட்டி என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்ட் தி கிங் என்ற உயர்நிலைப் பள்ளியில் சமூக கல்வி பாட இடைவேளையின் போது குறித்த நபர் மாணவியை கத்தியால் குத்தி தாக்கிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் காணப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெனியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பெருந்துயரத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் பவுண்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பவுண்டி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.