உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைப் பயன்படுத்தி, கனேடியர்களிடம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை, இணைய ஊடுருவிகள், மோசடி செய்துள்ளதாக கனேடிய மோசடி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த மார்ச் 6ஆம் திகதி முதல் 739 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த முயற்சிகளில் 178 வெற்றி பெற்றதாகவும் கனேடிய மோசடி தடுப்பு மையத்தைச் சேர்ந்த ஜெஃப் தாம்சன், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விபரிக்கும் போது, ‘கொவிட்-19 வைரஸ் தொற்றுள்ள ஒருவரிடம், அவரின் நேர்மறையானதை பரிசோதித்த அறிக்கைகளை பெற்றுக்கொள்கின்றனர். மேலும் எக்செல் படிவத்தைப் போல தோற்றமளிக்கும் சில கோப்புகளை உருவாக்கி கொள்கின்றனர்.
பின்னர், பயனர்கள் உள்ளடக்கத்தை இயக்க கிளிக் செய்து படிவத்தைப் பார்க்கும்போது, தீங்கிழைக்கும் கோப்புகளை நிறுவும் ட்ரோஜன் பதிவிறக்கத்துடன் இது அவர்களின் கணினிகளைப் பாதிக்கிறது’ என விபரித்துள்ளார்.
மோசடி செய்பவர்கள் அவசரகாலத்தில் பணம் சம்பாதிக்க, தங்கள் தந்திரோபாயங்களைத் தழுவுவது இது முதல் முறை அல்ல என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதுதவிர தகவல் தொடர்பு பாதுகாப்பு ஸ்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சைபர் பாதுகாப்புக்கான கனேடிய மையத்தின் ரியான் ஃபோர்மேனும் இதே கருத்தினை முன்வைத்துள்ளார்.