Reading Time: < 1 minute
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 62பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 47ஆயிரத்து 142பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 112பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 636பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 77ஆயிரத்து 394பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.