Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 506பேர் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 387பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 20ஆயிரத்து 372பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 59ஆயிரத்து 351பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 172பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.