Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 90பேர் பாதிக்கப்பட்டதோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 753பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பத்தாயிரத்து 722பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 788பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 86பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.