Reading Time: < 1 minute
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 219பேர் பாதிப்படைந்ததோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 536ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 684பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27,613பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 69,239பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 2,128பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.