Reading Time: < 1 minute
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 501பேர் பாதிப்படைந்ததோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 4,722ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27,783பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,347பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 2,110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.