Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 471பேர் பாதிக்கப்பட்டதோடு, 55பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 55ஆயிரத்து 809பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 436பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 34ஆயிரத்து 136பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 11ஆயிரத்து 237பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.