Reading Time: < 1 minute

லெக்சாண்ட்ரா பூங்காவில் உள்ள நகரத்தால் இயக்கப்படும் குழந்தை பராமரிப்பு மையம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பராமரிப்பு மையத்திலுள்ள இரண்டு உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா பார்க் ஆரம்பகால கற்றல் மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள முன்பாடசாலை அறையில் ஒரு ஊழியர் உறுப்பினர் பெப்ரவரி 25ஆம் திகதி முதலில் வைரஸின் நேர்மறைச் சோதனை முடிவு கண்டார் என்று நகரம் கூறுகிறது. இரண்டாவது ஊழியர் உறுப்பினர் மார்ச் 1ஆம் திகதி நேர்மறைச் சோதனை முடிவு கண்டார்.

ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் சுய தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இருப்பினும், குறிப்பிடப்படாத காலத்திற்கு முழு வசதியையும் மூடுவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையிலிருந்து எழும் செயந்பாட்டுக்காரணிகளால் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

துப்புரவு முடிந்ததும் ரொறொன்ரோ பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி இந்த மையம் மீண்டும் திறக்கப்படும் என்று நகரம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.