கியூபெக்- சாம்பிலியில் உள்ள லெஸ் அலிமென்ட்ஸ் கார்கில் இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மான்டெரெஜி ஆலை மூடப்பட்டுள்ளது.
மொன்றியலுக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்டெரெஜி ஆலையில், குறைந்தது 64 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது உள்ளூர் தொழிலாளர்களில் 13 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், ‘கார்கில் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தங்கள் முன்னுரிமையாக இருப்பதால், கியூபெக்கிலுள்ள சாம்பிலியில் உள்ள தங்கள் புரத உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்துள்ளோம்.
தங்கள் ஊழியர்களை விரைவாகப் பரிசோதிக்க உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்துடன் கார்கில் நெருக்கமான கூட்டுறவில் பணியாற்றுகிறது’ என கூறினார்.