ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிஸார் ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளனர்.
ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக இந்த இரண்டு நகரங்களிலும் இடம்பெறக்கூடிய வாகன கடத்தல் மற்றும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவே இவ்வாறு ஹெலிகொப்டர் கொள்வனவு செய்யப்பட உள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 134 மில்லியன் டொலர் செலவில் ஐந்து ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளது.
ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஒட்டாவாவில் இந்த ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொள்ளைச் சம்பவங்களின் போது பொலிஸாருக்கு உதவும் நோக்கில் இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் இந்த ஆண்டில் இதுவரையில் 957 வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவில் ஒவ்வொரு 14 நிமிடத்திற்கு ஒரு தடவையும் வாகனம் கொள்ளையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.