Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூடுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் எல்லையை மூடுவது என்றும், தேவையின்றி மக்கள் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் ”கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து ட்ரம்புடன் பேசினேன். இருநாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டோம்” எனக் கூறினார்.