Reading Time: < 1 minute

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் கொரானோ வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.

டென்மார்க்கில் 31 பேரும், பின்லாந்தில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிரான்ஸில் இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜேர்மனியில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 112 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரீஸில் 73 பேரும், ஐஸ்லாந்தில் 50 பேரும், அயர்லாந்தில் 21 பேரும், நெதர்லாந்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கனடாவில் இதுவரையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.