Reading Time: < 1 minute

கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது.

நமது வெற்றிக்குப் பின், உக்ரைனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். கனடா கீவில் இன்று மீண்டும் செயற்பாடுகளை தொடங்கியுள்ளது’ என கூறினார்.