Reading Time: < 1 minute

இந்தியா கொடுத்த காலக்கெடுவுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வருகிற 10 ஆம் திகதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது.

ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்
அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றம் சுமத்திய நிலையில் இந்தியா அக்குற்றசாட்டினை மறுத்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.