Reading Time: < 1 minute
உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் 60 நாட்களுக்குள் 100 மில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
60 நாட்களுக்குள் நூறு மில்லியன் டொலர்களை செலுத்தினால் கனடிய இணைய செய்தி சட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு 100 மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு செலுத்துவதாக உறுதியளித்திருந்தது.
செய்தி பிரசுரிப்பாளர்களுக்கு இந்தத் தொகையை செலுத்த கூகுள் இணங்கி இருந்தது.
இந்த நிதி கனடிய செய்தி நிறுவனங்களுக்கிடையில் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.