மூன்று மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில், குழந்தைகள் தற்செயலாக நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களை உபயோக்கித்த வழக்குகள், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் அதிகரித்துள்ளன.
ஒன்றாரியோ, மனிடோபா மற்றும் நுனாவுட் ஆகியவை கடந்த ஆண்டு இதே நேரத்தில் கண்ட 318 பதிவுகளுடன் ஒப்பிடும்போது 536 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 101 வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஒரு அறிக்கையில் 29 மட்டுமே காணப்பட்டது.
இது பெரும்பாலும் கொவிட்-19 மற்றும் கனேடியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சுத்திகரிப்பை மேலும் மேலும் இணைப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணமாகும். குழந்தைகள் கைச் சுத்திகரிப்பான்களையும் குடித்து இருந்தார்கள்.
கூடுதலாக, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கனடாவில் பாதிப்புக்கு ஆளாதல்களில் 58 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டது. .அவற்றில் பல துப்புரவுப் பொருட்கள், கிருமிநாசினிகள் மற்றும் கைச் சுத்திகரிப்பான்களை உள்ளடக்கியன. அவற்றல் பெரியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் அண்மையில் போலிக் கைச் சுத்திகரிப்பான்கள் கட்டுப்பாடில்லாமல் கிடைப்பதால், எது உண்மையானது மற்றும் எது போலி என்பதைக் கண்காணிப்பது கடினம்.