கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது குடும்ப வன்முறை அதிகரிக்க முதன்மை காரணமாக அமையும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் கொரோனா பெருந்தொற்றால் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததாக கூறும் நிபுணர்கள், பெண்களுக்கு எதிராகவும், சிறார்களுக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் அதிகம் பதிவானதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதே நிலை, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதிகரிக்க அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தரப்பு கூறுகின்றனர். விலைவாசி உயர்வு அதிகமானால் பெண்களின் வாங்கும் சக்தி சரிவடையும், மட்டுமின்றி தங்களின் தனிப்பட்ட செலவுகளுக்கும் பிறரை நாடும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெருந்தொற்று காலகட்டத்தில் பொருளாதரா நெருக்கடியால பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர்கள், தங்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், 93 சதவீத பெண்கள், தங்களை துஷ்பிரயோகம் செய்பவர், உணவு மற்றும் உடைகளுக்குத் தேவையான பணத்தைத் தடுத்து வைப்பதாகக் கூறியுள்ளனர்.