Reading Time: < 1 minute
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், ஒன்றாக இணைந்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளினால் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கான பல காரணிகள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கொரோனா மற்றும் ஓமிக்ரோன் நிலைமைகளை வெற்றிகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.