கியூபெக் மாகாணத்தில் தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மாகாண தொழில் அமைச்சர் ஜியன் போல்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கை 23300 ஆக காணப்பட்டதாகவும், கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 38500 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு வர்த்தக முயற்சியான்மைகளில் ஏற்பட்டுள்ள கிராக்கி காரணமாக இவ்வாறு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் விவசாயத்துறையில் மட்டும் வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது, பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அடிப்படையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.