Reading Time: < 1 minute

கனடாவின் வடக்கு கியூபெக்கில் உள்ள அம்கி நகரில் பாதசாரிகள் மீது பிக்-அப் டிரக் மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் தீர்மானிக்க முயற்சிக்கின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய 38 வயதான உள்ளூர் நபரான வாகனத்தின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு பேரும் 70கள் மற்றும் 6கள் வயது மதிக்க தக்கவர்கள் என கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்தன.

அம்கி மக்களுடன் இருப்பதாகவும் நடந்த சோகமான நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ஒரு பேருந்து சாரதி, மாண்ட்ரீல் பரபரப்பான தினப்பராமரிப்பு நிலையத்திற்குள் பேருந்தை மோதி விபத்தை ஏற்படுத்தி, இரண்டு குழந்தைகளைக் கொன்று பலரை காயப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.