Reading Time: < 1 minute

கியூபெக்கில் வெடிப்புச் சம்பவமொன்றில் காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ப்ரோபேன் வாயு உற்பத்தி நிலையமொன்றில் அண்மையில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

கியூபெக்கின் மொன்றியலின் ரோச் டி அச்சிகன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இரண்டு பணியாளர்களும் ஒரு மேற்பார்வையாளரும் இந்த வெடிப்புச் சம்பவத்தில் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பிரதேச மக்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோச் டி அச்சிகன் நகரசபையிலும் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.