Reading Time: < 1 minute


கனடாவின் கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு இந்த தாக்குதலை அடுத்து பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க பழைய கியூபெக்கில் பாராளுமன்றை சுற்றியுள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கத்திக் குத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்தையோ உறுதிப்படுத்தாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
