Reading Time: < 1 minute

கியூபாவில் வாழ்ந்து வரும் கனடியர்கள் எவரும் உதவிகளை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கியூபாவில் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக நாட்டில் சீறற்ற காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரமும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபாவில் சுமார் 1600 கனடியர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தூதரகம் ஊடாக கனடியர்கள் இதுவரையில் எவ்வித உதவியையும் கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கியூபாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் பயண எச்சரிக்கைகள் குறித்து அறிந்து கொண்டு பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் கியூபாவிற்கான கனடிய தூதரகத்தின் ஊடாக, கனடிய பிரஜைகளுக்கு உதவிகளை வழங்க ஆயத்தமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சி தெரிவித்துள்ளது.