Reading Time: < 1 minute
கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியொன்றில் கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த நபர் ஒருவர் முயற்சித்து வருகின்றார்.
பென் பொப்ஜோய் என்ற நபரே இவ்வாறு சாதனை படைக்க முயற்சித்து வருகின்றார்.
ஒரே ஆண்டில் அதிகளவு மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையை நிலைநாட்ட தாம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த லெரி மெக்கோன் என்ற நபர் ஒரே ஆண்டில் 239 மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று கின்னஸ் உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.
கனடா உள்ளிட்ட 90 நாடுகளில் இந்த ஆண்டில் மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று கின்னஸ் உலக சாதனை படைக்க உத்தேசித்துள்ளதாக பொப்ஜோய் குறிப்பிடுகின்றார்.