Reading Time: < 1 minute
ஒன்றாரியோவின் கிங்ஸ்டனில் உள்ள அனைத்து உட்புற பொது இடங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேயர் பிரையன் பேட்டர்சன் மற்றும் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மளிகைக் கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள், சிகை மற்றும் நக அலங்கார நிலையங்கள், அத்துடன் சமூக மையங்கள், வழிபாட்டு இல்லங்கள், நூலகங்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் வாடகை கார்களுக்குள் செல்ல முகக்கவசம் அணிய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாய முகக்கவச தேவை விதிக்கு இணங்கத் தவறினால், வணிக நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.