Reading Time: < 1 minute
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுளது.
இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
அந்த பொலிசாரின் பெயர் ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்பதாகும்.
சீருடை அணியாத ஹரிந்தர், கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பும் கூட்டத்தினருடன் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
அதைத் தொடர்ந்து ஹரிந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.