காலநிலை மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் டொரன்டோ பெரும்பாக பகுதியில் பாரிய மழை வெள்ளம் ஏற்பட்டது.
இந்த சீரற்ற காலநிலை அளத்தமானது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை வீரியத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மழை மற்றும் பலத்த காற்று போன்ற காரணிகளினால் டொரன்டோ மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சார வசதியின்றி அவதியுற நேரிட்டது.
சீரற்ற காலநிலையின் போது நகர பணியாளர்கள், மின்சார பணியாளர்கள் மற்றும் பல்வேறு வகைகளிலும் உதவியவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ள அனர்த்தம் குறிப்பிடத்தக்க ஓர் நிகழ்வு என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அடிக்கடி இவ்வாறான காலநிலை அனர்த்தங்களை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் முதலீடு செய்யப்பட வேண்டும் எனவும் கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்