கனடாவின் கான்வெல் நகரத்தில் குப்பை சேகரிப்பதில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை திரட்டும் கைகள் இதுவரை காலமும் கறுப்பு நிறத்திலானவையாக காணப்பட்டன.
எனினும் நகர நிர்வாகம் இந்த பைகளின் நிறத்தை வெளிப்படைத்தன்மையான பிளாஸ்டிக் (Clear Plastic) பொதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு வெளிப்படை தன்மையுடைய பிளாஸ்டிக் பொதிகளை பயன்படுத்துவது மக்களின் தனி உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பையில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும் வகையிலான பொதிகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சரியான முறையில் குப்பைகளை பிரித்து போடுகின்றார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
எனினும் இவ்வாறு தெளிவான பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை இடுவது தங்களது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நகரின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நகர நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வோர் அல்லது குப்பைகளை திரட்டுவோர் பொதிகளில் என்ன இருக்கிறது என்பதனை பார்ப்பதற்கும் அவற்றை இலகுவில் வகைப்படுத்துவதற்கும் நகர நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இவ்வாறு குப்பைகள் தெளிவான பைகளில் பார்க்கக்கூடியவாறு சேகரிப்பதானது தங்களது தனி உரிமையை பாதிக்கும் என கருத்து கணிப்பு ஒன்றின் பங்கேற்ற நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.