காதலின் வெறுப்பையும், கோவத்தையும் வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கலாம் என கனடா பூங்கா ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வியப்பையூட்டும் திட்டம் டொராண்டோவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி நம்முடைய வெறுப்பை சம்பாதித்த மனிதர்களின் பெயரை கரப்பான்பூச்சிக்கு சூட்ட டொராண்டோ உயிரியல் பூங்காஅனுமதித்துள்ளது. வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னாள் காதலிகள், காதலர்கள், மட்டுமல்லாது எரிச்சலூட்டும் முதலாளிகள், எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் உறவினர்கள் என அனைவர் பெயரையும் கரப்பான் பூச்சிகளுக்கு வைக்கலாம்.
பூங்கா நிர்வாகம் விளம்பரம்
கனடாவின் டொராண்டோ உயிரியல் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ‘நேம்-எ-ரோச்’ பிரச்சாரத்தை கொண்டு வந்தது. வெறுப்பை வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயரிடும் வகையில் இந்த பரப்புரை அனுமதிக்கிறது.
இதற்கு குறைந்தபட்சம் 25 டாலர்கள் (ரூபாய் 1,507) செலுத்த வேண்டும். வரும் காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிக்கு உங்களின் முன்னாள் காதலி அல்லது காதலரின் பெயரை சூட்டுங்கள் என உயிரியல் பூங்கா நிர்வாகம் விளம்பரம் தருகிறது.
அதைப் போலவே எந்நேரமும் திட்டிக் கொண்டே இருக்கும் முதலாளிகள், கணவன், மனதை காயப்படுத்தும் யார் பெயரை வேண்டுமானாலும் கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாம் வெளிப்படுத்தாத உணர்வுகள் மனதில் தேங்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வெளிப்படுத்தாத கோபம் வெறுப்பாக மாறி வன்மமாக உருவெடுக்கிறது. இதை வெளிப்படுத்தி மனதை இளகுவாக்கவே இந்த ஐடியாவை கனடா பூங்கா முன்னெடுத்துள்ளது.
எனினும் கரப்பான் பூச்சிக்கு அவதூறான பெயர்களையும், வெறுப்பை ஏற்படுத்தும் விதமான பெயர்களையும் வைக்க நிர்வாக விதிகள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.