Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வழங்கினால் ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரு ஆண்டுக்கு முன்னதாக காணாமல் போன பெண் ஒருவர் பற்றிய தகவல்களையே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

எல்னாஸ் ஹஜ்டமாரி (Elnaz Hajtamiri) என்ற பெண் ஒன்றாரியோவில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெள்ளை வாகனமொன்றில் கடத்தப்பட்டுள்ளார்.

போலி பொலிஸ் உடையணிந்த மூன்று பேர் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். இந்த பெண்ணின் தற்போதைய நிலைமை குறித்து எதுவும் தெரியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கினால் அவர்களுக்கு ஒரு லட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.