Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பணப்பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெனிஷா ஒஸ்டின் என்ற பெண்ணுக்கு இந்த பணப்பை கிடைக்க பெற்றுள்ளது. தனது தாயாரின் பணப்பை ஒன்றே நான்கு தசாப்தங்களின் பின்னர் கிடைக்க பெற்றுள்ளது என ஒஸ்டின் தெரிவிக்கின்றார்.

தனது தாயாரின் பணப்பை 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு இது பற்றி தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடு ஒன்றின் சுவர் மற்றும் குழாய் பொருத்தும் பகுதிக்கு இடையில் சிக்கியிருந்த பணப்பையை கண்ட வீட்டு உரிமையாளர் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சித்துள்ளார்.

இந்த முயற்சியின் பலனாக ஒஸ்டினது முகவரியை கண்டறிந்து அவரது அலுவலகத்திற்கு குறித்த பணப்பையை கொண்டு சேர்த்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பொருள் மீள கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த பணப்பையில் தமது தாயின் குடிவரவு ஆவணங்கள், தனது புகைப்படம், தனது தந்தையின் புகைப்படம் வாங்கி அட்டை மற்றும் ரொறன்ரோ பொது நூலக அங்கத்துவ அட்டை போன்றன காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதிக்கு முன்னதாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட கூப்பன் ஒன்றும் இந்த பணப்பையில் இருந்ததாக ஒஸ்டின் குறிப்பிடுகின்றார்.

இந்த பணப்பையை பார்த்த போது 1980களுக்கு சென்று வந்த ஓர் உணர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றார்.